சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தர்பார் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கமல் பற்றி தவறாக பேசியதாக தகவல்கள் வெளியாகின.

Advertisment

Raghava Lawrence-kamal-meet

இந்நிலையில் பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் குறித்து நான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது, இது தொடர்பாக நடிகர் கமலை சந்தித்து விளக்கமளித்தேன் என்று கூறி கமலுடன் இருக்கும் புகைப்படத்துடன் ராகவா லாரன்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

Advertisment

Raghava Lawrence-kamal-meet

அதில், "எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.