Skip to main content

ஹிந்தியில் லாரன்ஸ் இயக்கும்  ‘லக்‌ஷ்மி பாம்’...

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்குகிறார். 
 

akshay kumar

 

 

காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது தற்போது அது உண்மையாகியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார்.


காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். 
 

devarattam



இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அக்‌ஷய் குமாருடன் புகைப்படம் எடுத்தும் பதிவிட்டிருக்கிறார். இந்த படத்தின் ஹீரோயின் கியாரா அத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் கிளாப் போர்டுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழில் சரத்குமார் திருநங்கையாக நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

காஞ்சனா-3 தமிழில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தம்பியுடன் களமிறங்கும் பிரபல நடிகர்

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

ks ravikumar directing next movie starring Raghava Lawrence and elvin

 

'ஃபைவ் ஸ்டார் கிரியேக்ஷன்' சார்பாக கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக் கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சகோதரர் எல்வினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க, ட்ரென்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு கே.எஸ் ரவிக்குமார் தமிழ் படம் இயக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

 

Next Story

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

Aishwaryaa rajinikanth directing raghava lawrence Durga durga film

 

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ராகவா லாரன்ஸ் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்தாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதாநாயகனாக "துர்கா" படத்தில் நடிக்கவுள்ளார். துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்கள் நிறைய இருப்பதால் துர்கா படத்திலிருந்து விலகியுள்ளனர். 

 

இந்நிலையில் 'துர்கா' படத்தை ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் '3', கெளதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'பயணி' என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராகவா லாரன்ஸ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது 'துர்கா' படத்தை இயக்க வேண்டும் என  கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு கூட இத்தகவலை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.