ADVERTISEMENT

விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே

01:15 PM Jun 12, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, இந்தியில் 'மும்பைக்கார்' மற்றும் 'ஜவான்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். மேலும் மௌன படமான 'காந்தி டாக்கீஸ்' படத்திலும் நடிக்கிறார். தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கும் புது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதனிடையே பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகை ராதிகா அப்தே இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் இந்தாண்டு டிசம்பரில் வெளியாகவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT