/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/134_72.jpg)
தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, இந்தியில் 'மும்பைக்கார்', 'ஜவான்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் மௌன படமான 'காந்தி டாக்கீஸ்', தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுக குமார் இயக்கும் புது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகிஇருக்கிறது. தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.
இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்து, தற்போது2024 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தை மையமாக வைத்து ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளதுபோல் தெரிகிறது. அந்த அமைதியான இரவில் சில விஷயங்களால் ஆபத்தான இரவாக மாறியதுபோல் யூகிக்க முடிகிறது. அதில் ஆக்ஷன், காதல் உள்ளிட்டவை கலந்து த்ரில்லர் ஜானரில் தயாராகியுள்ளது போல் ட்ரைலர் அமைந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)