vijay sethupathi about katrina kaif

Advertisment

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.

ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடு பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அதில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விஜய் சேதுபதி பதிலளிக்கையில், “நான் வில்லன் கதாபாத்திரங்களை ரசிக்கிறேன்.

திரையில் நீங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம் மற்றும் விளையாடலாம். வெளிப்படுத்துதல் என்பது உணவு மற்றும் சுவை போன்றது, நான் எல்லா சுவைகளையும் கொண்டிருக்க விரும்புகிறேன். கத்ரீனா கைஃப்பின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. திரைத்துறையில் அவர் இன்றும் இருப்பது, அவர் அழகாக இருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவருடைய புரிதல் தான். அவர் ஒரு சிந்தனையுள்ள நடிகை” என்றார்.