ADVERTISEMENT

"எந்த அரசாங்கமாக இருக்கட்டும், தைரியமாகப் பேசுபவர் விஜய் சேதுபதி" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

11:17 AM Apr 04, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை ஜவர்ஹலால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான சீனியர் கூடைப்பந்து போட்டி நேற்று(3.4.2022) தொடங்கியது. அதில் ஆண்கள் பிரிவில் 16 ஆணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றுள்ளனர். 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். இப்போட்டியின் தொடக்க விழாவில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அந்த வகையில் இவ்விழாவில் பேசிய பேசிய அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் ”பல கோடி மக்களை போல் நானும் விஜய் சேதுபதி ரசிகன்” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஒரு பொது தொழிலில் இருந்துகொண்டு, தெளிவான கருத்தை தைரியமாக சொல்லி, அரசாங்கம் யாராக இருந்தாலும் இருக்கட்டும் என்ற தன்மையுடனும், சிந்தனையுடனும் பேசுபவர் விஜய் சேதுபதி. பல கோடி மக்களை போல நானும் விஜய் சேதுபதி ரசிகன்" எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT