ADVERTISEMENT

"நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக்குறேன்..." - தயாரிப்பாளர் வேதனை பேச்சு   

04:03 PM Apr 14, 2019 | vasanthbalakrishnan

இயக்குனர் கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன் உள்பட பலரும் நடித்துள்ள 'பற' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு...

ADVERTISEMENT



"இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் இந்நிகழ்ச்சியின் ஹீரோ இசையமைப்பாளர்தான். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் சிறப்பாக வர வேண்டும். 'லண்டனுக்கு டிக்கெட் போடுங்க, அங்க போனாதான் எனக்கு ட்யூன் வரும். அதுவும் குடும்பத்தோட போனாதான் வரும்'னு எல்லாம் சொல்லாதீங்க. அப்படி சொன்னா நல்லா இருக்கமாட்டீங்க. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லல. தயாரிப்பாளர் தன் வீட்டை வித்து, நகையை வித்து கொண்டு வரும் பணத்தை வீணாக்காம வேலை செய்யணும். 'நம்மள நம்பி இந்த மனுஷன் பணம் போடுறாரே' என்ற பொறுப்பு இருக்கணும். பா.ரஞ்சித்துக்குத் தெரியும், ரஜினி அப்படித்தான். ஏன், சிவாஜியும் அப்படித்தான். 'தயாரிப்பாளர் நல்லா இருக்கணும்'னு வேண்டிகிட்டுதான் ஷூட்டிங் வருவாங்க. நேரம் தவறாம வருவாங்க. ஆனா, இன்னைக்கு நிலைமை மாறிடுச்சு. தயாரிப்பாளர்கள் அடிமையாகிட்டாங்க. அது அந்தந்த தயாரிப்பாளர்களின் ஆளுமை திறனின்மை.

'அப்பா' படத்தை நான் கொண்டாடுவேன். ஒரு விரசம் கிடையாது. பத்து வருஷமா சில தம்பிகள் அற்புதமா படம் பண்றங்க. 'சுப்பிரமணியபுரம்' படத்துல ஆரம்பிச்சது இது. இப்போ வரைக்கும் நல்ல நல்ல படம் எடுக்குறாங்க. அதுலயும் சில சொத்தைக் கடலைகள் வருது. அதென்ன பேரு... 'பியார்...' அதுல ஒரு பொண்ணு, பையனை குடிக்க சொல்லுது. குடிக்கலைனா ஆம்பளை இல்லைன்னு சொல்லுது. அதுக்கப்புறம் பொண்ணு அவனை கூப்பிடுது. அந்த மாதிரி படம் எடுக்குற தம்பிகளை கேக்குறேன். அம்மா அப்பா அக்கா தங்கைனு வாழுற நம்ம வீட்டுல எதுக்காக பாத்ரூம், படுக்கையறைன்னு தனித்தனியா கதவு வச்சு கட்டுறாங்க. எல்லாத்தையும் வெளிய பண்ண முடியாதா? நான் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன், கலாச்சாரத்தை கெடுக்காதீங்க. தமிழினத்தின் பெருமை இந்தக் கலாச்சாரம். அதை கெடுத்துடாதீங்க".

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT