atlee jawan movie issue producers council question

தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். குறிப்பாக முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹிட் படங்களைக் கொடுத்து பலரது கவனத்தைப் பெற்றார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="51ad3ceb-4eba-4a28-88d1-c30899f5fa64" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/NMM-500x300_6.jpg" />

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் 'ஜவான்' படத்தின் கதை விஜயகாந்த் நடித்த 'பேரரசு' படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த புகார் தொடர்பாகத்தயாரிப்பாளர் சங்கம்விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மாணிக்கம் நாராயணனிடம் 'பேரரசு' படத்தின் கதை உரிமம் உள்ளதா என விசாரித்து வருவதாகவும் 'ஜவான்' படம் 'பேரரசு' படத்தின் கதை என்பதற்கு அவரிடம் ஆதாரம் இருக்கிறதா என விளக்கம் கேட்கத்தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆதாரம் பொறுத்தே அட்லீயிடம் விசாரணை நடத்தத்திட்டமிட்டுள்ளதாம் தயாரிப்பாளர் சங்கம்.