ADVERTISEMENT

'தளபதி 66' பணிகள் தொடங்குவது எப்போது? வெளியானது புதிய தகவல்!

12:49 PM Sep 09, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பீஸ்ட்’ படத்தினை நிறைவுசெய்த பிறகு, அடுத்ததாக இயக்குநர் வம்சி இயக்கும் 'தளபதி 66' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி இப்படம் குறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது தொடங்கினாலும் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில்தான் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT