ADVERTISEMENT

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் பிரஷாந்த்!

01:31 PM Jun 29, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் என தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் பிரஷாந்த் மற்றும் அவரது தந்தை நடிகர் தியாகராஜன் இருவரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த இவர்கள் அதற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர். இதையடுத்து பத்திரிகையார்களைச் சந்தித்த பிரஷாந்த் மற்றும் தியாகராஜன், "முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும், கரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளேன். முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. மிகவும் கடினமாக உழைத்துவருகிறார். கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி!" என கூறினார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT