money fraud complaint against actor Prashanth

Advertisment

நடிகர் பிரஷாந்த் தற்போது 'அந்தகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் பிரஷாந்த் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் குமுதினி என்பவர், பிரஷாந்த் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இதனிடையே பிரஷாந்த் தரப்பு அவர் பொய் புகார் அளித்திருப்பதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது புகார் கொடுத்துள்ளார்கள்.