ADVERTISEMENT

'பொன் மாணிக்கவேல்' படத்தில் பிரபுதேவா 

01:46 PM Jul 19, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

மெர்குரி படத்திற்கு நடிகர் பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக 'யங் மங் சங்', 'லக்‌ஷ்மி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்ற நிலையில் தற்போது பிரபுதேவா நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் நடிக்து கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்திற்கு 'பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து அதிகாரபூர்வ டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளனர். சிலை கடத்தல் கும்பல்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சிலைகளை மீட்ட பிரபல காவல் துறை ஐ.பி.எஸ். அதிகாரி 'பொன் மாணிக்கவேல்' பெயரை இப்படத்திற்கு வைத்துள்ளதால் இப்படத்தில் நடிகர் பிரபுதேவா ஐ.பி.எஸ். அதிகாரி 'பொன் மாணிக்கவேல்' கதாபாத்திரத்தில் நடிப்பதாக பரவலாக கூறப்படுகிறது. நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், நடிகர் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, 'பாகுபலி' பிரபாகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT