'காற்று வெளியிடை' படத்தையடுத்து மணிரத்னம் அடுத்தாக இயக்கிக்கொண்டிருக்கும் படம் 'செக்கச் சிவந்த வானம்'. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உட்பட பலரும் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துபாயில் வைத்து படமாக்கிய மனிரத்னம் அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
பிரச்சனை இல்லாமல் படப்பிடிப்பை நிறைவுசெய்த சிம்பு
Advertisment