style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வடிவேலு நடிப்பில் உருவான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டபடி சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். அதில் நடித்த வடிவேலு இயக்குனருடன் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென்று படத்தில் இருந்து விலகினார். இதனால் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்காததால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு பெற்று தரும்படி படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து தயரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதால் படத்தில் இருந்து விலகியதாக வடிவேலு அறிவித்திருந்தார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார் என்றும் வடிவேலு கூறினார். இதையடுத்து இந்த புதிய சிக்கலை எப்படி சமாளிப்பது என்று தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து ஒரு முடிவு எடுத்துள்ளனர். அதன்படி வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி வடிவேலு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் வடிவேலு தனக்கு தடை விதிக்கும் பட்சத்தில் அதை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">