ADVERTISEMENT

சூப்பர் மார்க்கெட், ஆன்லைன் மார்க்கெட் அவசியமா...? பதில் சொல்லும் 'பெட்டிக்கடை' !

02:04 PM Feb 23, 2019 | santhosh

ADVERTISEMENT

இன்றைய வாழ்வில் என்னதான் நாட்டில் உள்ள சூப்பர் மார்கெட்டுகளும், ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளங்களும் நமக்கு தேவையானதை உடனுக்குடன் கைகளில் கொண்டு சேர்த்தாலும், சிறு வணிகர்களின் பங்கும் நமக்கு தேவையான ஒன்றாகவே இருப்பதும் நிதர்சனமான உண்மை. அதிலும் குறிப்பாக ஆங்காங்கே தென்படும் 'பெட்டிக்கடை' தான் சின்ன சின்ன தேவைகளை உரிய நேரத்தில் நமக்கு பூர்த்தி செய்கின்றது. அப்படி பெட்டிக்கடையின் மகத்துவத்தையும், தேவையையும் அழகாக சொல்லியுள்ளது வெள்ளியன்று வெளியான 'பெட்டிக்கடை' படம்.

ADVERTISEMENT

ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்லும் சாந்தினி அங்கு இருக்கும் ஊர் மக்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒரு கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் அங்கு கடைகளே இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டு டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். அதையும் மீறி ஊருக்குள் கடை வைப்பவர்களை கொலை செய்து விடுகிறார்கள். மேலும் இதை தட்டிக்கேட்கிறவர்களையும் காலி செய்து விடுகிறார்கள். இதையெல்லாம் கண்டு வெகுண்டு எழும் சாந்தினி ஊர் மக்களுடன் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு எப்படி இவர்களை அங்கிருந்து ஒழித்துக்கட்டி சிறு வணிகர்களை மீட்கிறார் என்பதே 'பெட்டிக்கடை'.

சாந்தினி துணிச்சலான போராளியாக நடித்து படத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். எங்கெங்கெல்லாம் ரவுத்திறம் பழக வேண்டுமோ அங்கெல்லாம் தன் அருமையான நடிப்பால் படம் பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆசிரியராக வரும் சமுத்திரக்கனி வசனங்கள் மூலம் ஊழல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார். சிறிது நேரமே வந்தாலும் அவரது பாத்திரம் மனதில் பதியும்படி உள்ளது. இந்த மாதிரியான கதை கருவிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி வருவது படத்திற்கு கூடுதல் சிறப்பு. புல் டவுசராக வரும் வீரா, வர்ஷாவின் காதல் காட்சிகள் அருமையாக இருந்தாலும் அதன் நீளத்தை குறைத்து கதை கருவிற்கு இன்னமும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அயர்ச்சி ஏற்படும் இடங்களில் எல்லாம் அதை போக்க முயற்சி செய்துள்ளார் மொட்டை ராஜேந்திரன்.

நம் வாழ்க்கைக்கு தேவையான கருத்தை படமாகியதற்காகவே இயக்குனர் இசக்கி கார்வண்ணனுக்கு பாராட்டுக்கள். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களால் எப்படி பெட்டிக்கடைகள் அழிந்து போகின்றது, அதனால் ஏற்படும் விளைவுகள் என சமூகத்திற்கு தேவையான விஷயத்தை சொல்லி ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது 'பெட்டிக்கடை'. இருந்தும் திரைக்கதையில் சற்று கவனமாக இருந்திருக்கலாம். குறிப்பாக முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளை குறைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் நமக்கு என்ன தேவை என்பதை நாமே முடிவு செய்து தற்சார்பு பொருளாதாரத்தில் ஈடுபடவேண்டும் என்ற கருத்தையும், பெட்டிக்கடைகளின் மகத்துவத்தையும், தேவையானது எது என கார்ப்பரேட் நிறுவங்கள் முடிவு செய்து அதை எப்படி திணிக்கிறது என்பதையும், சிறு வணிக முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் சொன்னதற்கே 'பெட்டிக்கடை' தவிர்க்கமுடியாத படம்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT