/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/469_8.jpg)
விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத்தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். இதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த உள்ளிட்ட சில நிர்வாகிகள், நேற்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இதனிடையே கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, “திரை உலகின்உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)