ADVERTISEMENT

விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேனா? பேரரசு பதில்...

03:46 PM Sep 20, 2019 | santhoshkumar

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீிட்டு விழா சென்னையில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த வருட தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.

இந்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

#தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 2019 தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் ஏப்ரல் 2020ல், ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு தற்போது நடிகர் விஜய்க்காக ஒரு கதை எழுதியிருக்காராம். இந்த கதையை எப்படியாவது விஜய்யிடம் சொல்லி ஓக்கே வாங்கிடவேண்டும் என்று மும்முரமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விஜய் லோகேஷ் கனகராஜ் படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லி வருகின்றனர்.


இந்நிலையில் இயக்குனர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விஜய் 65 படத்தை நான் இயக்கப் போவதாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது.

நான் விஜய்க்காகக் கதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை. நானும் என் கதையும் விஜய்க்காகக் காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இச்செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால், நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT