ADVERTISEMENT

கட்டவுட் சரிந்ததால் ரசிகர்கள் 3 பேர் உயிரிழப்பு!!! போனி கபூர் நிதியுதவி...

11:51 AM Sep 02, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ஹிந்தியில் ஹிட்டாகி பின்னர் தமிழில் நேர்கொண்ட பார்வை என்று ரீமேக் செய்யப்பட்ட படம் பிங்க். அமிதாப் பச்சனை தொடர்ந்து தமிழில் அஜித் நடித்திருந்தார்.

ADVERTISEMENT

தமிழிலும் இது ஹிட் அடித்ததை தொடர்ந்து, பவான் கல்யாணை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். கடந்த வருடமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இன்று பவனின் பிறந்தநாளை முன்னிட்டு மோஷன் போஸ்டரும் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.

பவனின் பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில அவருடைய ரசிகர்கள் ஹேஸ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பவனுக்கு கட்டவுட் வைக்கும்போது சரிந்து விழுந்ததில் மூன்று பேர் இறந்துள்ளனர். தற்போது இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான போனி கபூர், மறைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், அஞ்சலி, நிவேதா தாமஸ், அனன்யா நடித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT