Skip to main content

அஜித்தின் 'கண்மணி' - அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் 'துணிவு' டீம்

 

thunivu manju warrier character poster released

 

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், ஒரு புதிய அப்டேட் நாளை டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இந்த நிலையில் 'துணிவு' படத்தின் கதாபாத்திர பெயர் மற்றும் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. படத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் 'மை பா', பிரேம் - 'பிரேம்', பகவதி பெருமாள் - ராஜேஷ், ஜான் கொக்கேன் - க்ரிஷ், வீரா - ராதா, ஜிஎம் சுந்தர் - முத்தழகன், அஜய் - ராமச்சந்திரன், சமுத்திரக்கனி - தயாளன் உள்ளிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

 

தொடர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக போஸ்டர்களை வெளியிட்டு வரும் 'துணிவு' படக்குழு தற்போது படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் போஸ்டரை படக்குழு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.