ADVERTISEMENT

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல இயக்குநர் அதிரடி கைது!

05:17 PM Jun 21, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2016 ஆம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பால் ஹக்கீஸ் 'கிராஷ்' படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காகவும், தயாரித்ததற்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். இவர் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது இவர் மீது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து பால் ஹக்கீஸை மீது வழக்குப் பதிவு செய்த இத்தாலி காவல்துறை அவரை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. பாலியல் வழக்கில் பால் ஹக்கிஸ் சிக்குவது புதிதல்ல, ஏற்கனவே 4 பெண்கள் இயக்குநர் பால் ஹக்கீஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்திருந்தனர். ஆனால் இது தொடர்பான விசாரணையில் 2 பெண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறிக்க முற்பட்டனர் என்று கூறி பால் ஹக்கீஸ் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT