Will Smith slapped chris rockon Oscar stage

Advertisment

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில்சிறந்த நடிகருக்கான விருதை 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித் பெற்றுள்ளார். இந்த படம் வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இவ்விழாவில்வில் ஸ்மித் மனைவிஜடா பிங்கெட் ஸ்மித்தின் முடியற்றதலையை"ஜி.ஐ. ஜேன்" படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்தார். இதைகேட்ட வில் ஸ்மித் உடனே இருக்கையில் இருந்து எழுந்து ஆஸ்கர் மேடை ஏறி தொகுப்பாளர் கிரஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன் பின் அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்த வில் ஸ்மித் "என் மனைவி குறித்து இனி உன் வாயிலிருந்து வார்த்தை வரக்கூடாது" எனகட்டமாகதெரிவித்தார். இது அரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் வில் ஸ்மித்தின் மனைவிஜடா பிங்கெட் திட்டு திட்டாக முடி உதிரும்அலோபீசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.