ADVERTISEMENT

"என்ன பாடாய்படுத்தும் இவ்விருதுகள்..." - பார்த்திபன் ட்வீட்

07:34 PM Jul 22, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய அரசு சார்பில் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகர், நடிகை உள்பட மொத்தம் ஐந்து விருதுகளை 'சூரரைப் போற்று' படம் வென்றுள்ளது. அதோடு 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் மூன்று விருதுகளும், 'மண்டேலா' படம் இரண்டு விருதுகளும் வென்றுள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமா மொத்தம் பத்து (10) விருதுகளை கைப்பற்றியுள்ளது. இதற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபன் தேசிய விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனக்குத் தெரியும்! என்ன பாடாய்படுத்தும் இவ்விருதுகள் என… அவ்வுவகையுடன் வாழ்த்துகிறேன் சூரரைப் போற்று சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் மண்டேலா பத்தாம்! பத்தாது - இன்னும் வேண்டும் அடுத்த வருடத்தில்!" என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே யுவன் ஷங்கர் ராஜா, "தேசிய விருது வென்ற தமன் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள், மிகுந்த அன்பு" என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT