/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_83.jpg)
‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். படம் முழுவதும் தனி ஒருவராக நடித்தபார்த்திபனின் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், சென்ற ஆண்டுக்கான தேசிய விருதையும்இப்படம் தட்டிச் சென்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வின்னர்கள் கட்டா லங்கோ லியோன் என்பவர் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகவும், கிரைக் மான் என்பவர் சவுண்ட் டிசைன் பணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'வ்ஹிப்லஸ்' என்ற கனடா படத்திற்காக சிறந்த சவுண்ட் டிசைனுக்கான ஆஸ்கர் விருது கிரைக் மானுக்கு வழங்கப்பட்டது. அதே போன்று கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டா லங்கோ லியோனுக்கு அறிவியல் மற்றும் தொழிநுபாட்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் இருவரும் இரவின் நிழல் படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தில் ஏ.ஆர் ரஹ்மானுடன் சேர்த்து 3 ஆஸ்கர் விருது வின்னர்கள் இணைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)