Skip to main content

"100 வது நாளாக டப்பிங்" - கவுதம் மேனன் ரெஸ்ட் எடுக்க பார்த்திபன் விருப்பம்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

parthiban about dhruva natchathiram

 

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. 

 

இப்படம் குறித்து லிங்குசாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களுக்கு பிறகு கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் மேஜிக்கை திரையில் பார்க்க ஆவலாக இருப்பதாக அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மேலும் வருகிற நவம்பர் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக அறிவித்தது. 

 

இந்த நிலையில் இப்படத்திற்கு 100வது நாள் டப்பிங் குறித்து அவரது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள எக்ஸ் பதிவில், "காலையில் ஒரு கப் தேனீர் கூடவே ஒரு ஸ்கிரிப்ட்(நடிக்கவோ/இயக்கவோ) மூழ்கிவிட போதுமெனக்கு. ‘துருவி நட்சத்திரம்’ படப்பிடிப்பில் ஜிவிஎம்-முடன் ‘வ’  ‘வி’ ஆனது விபத்து அல்ல. துருவித் துருவி ஒவ்வொரு வார்த்தையாக 'so of all the people U will break the law sir?' என நான் பேசியதில் Break என்ற வார்த்தை bake என கேட்பதாகக் கூறி,100 வது நாளாக டப்பிங். சிரத்தையுடன் சிரமத்துடன் சிறப்பாக வந்துவிட முயலும் ஜிவிஎம்-மின் படம் ரிலீஸ் ஆக ஜிவிஎம்-மும் விரைவில் relieve ஆக விருப்பம்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்மூட்டியை இயக்கும் கௌதம் மேனன் 

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
mammooty to act in gautham menon direction

இயக்குநர் கௌதம் மேனன் சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த அவர், கடைசியாக ‘ஜோஷ்வா இமை போல காக்க’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், கதாநாயகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் இயக்கிய கௌதம் மேனன் இப்படம் மூலம் மலையளத்தில் அறிமுகமாகவுள்ளதாக மலையாள திரையுலகத்தில் பேசப்படுகிறது. 

மம்மூட்டி கடைசியாக பிரமயுகம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 15 ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது டர்போ, பஸுக்கா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பஸுக்கா படத்தில் கௌதம் மேனனும் நடித்துள்ளார். இந்த நிலையில் கௌதம் மேன்னன் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக அவர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படம் மூலம் மீண்டும் நயன்தாராவோடு இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன்பாக மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

புதிய உலக சாதனை படைத்த பார்த்திபனின் 'டீன்ஸ்' 

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Parthipans Teenz breaks new world record

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும், இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் டீன்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. 

இப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.