ADVERTISEMENT

'ராசிமான்' பெயர் சர்ச்சை - சீமானிடம் விளக்கமளித்த பார்த்திபன்!

04:04 PM Jan 13, 2021 | santhosh

ADVERTISEMENT

விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் 'ராசிமான்' என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காட்சியில் அந்த பெயர் பொறித்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை இக்காட்சியில் கிண்டல் செய்து இருப்பதாக கருதி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் இப்படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்து நடிகர் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார். அதில்...

ADVERTISEMENT

"நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக ’துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும் ’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர்பிரச்சனையை இயக்குனரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT