ADVERTISEMENT

'குறிப்பாக நாய்களின் நடவடிக்கைகள் வரும் காட்சிகள் அருமை' -  இயக்குநர் பாண்டிராஜ்

11:59 AM Mar 27, 2019 | santhosh

குடும்பத்தினரின் உணர்ச்சிகள் மற்றும் உறவுகளை அலங்கரிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து, இயக்கும் பாண்டிராஜிடமிருந்து பாராட்டினை பெற்றுள்ளார் “வாட்ச்மேன்” திரைப்பட இயக்குநர் விஜய். இவரின் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, யோகிபாபு மற்றும் கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ள “வாட்ச்மேன்” திரைப்படத்தினை பார்த்த பாண்டிராஜ் தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுகுறித்து இயக்குநர் பாண்டிராஜ் கூறுகையில்....“இயக்குநர் விஜய்யின் ‘வாட்ச்மேன்’ திரைப்படம், த்ரில்லர் மற்றும் நகைச்சுவையின் கலவையாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் அனுபவித்து பார்த்தேன். திரைகதை மிகவும் சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத ஆச்சரியமான திருப்பங்களும் நிரைந்திருந்தது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் யோகிபாபு திறம்பட நடித்துள்ளனர். குறிப்பாக நாய்களின் நடவடிக்கைகள் வரும் காட்சிகள் விரும்பி பார்த்தேன். தொழில்நுட்ப குழு சிறப்பாக பணிப்புரிந்துள்ளனர். மேலும் எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் ரீ-ரெகார்டிங் அனைத்தும் திரைப்படத்தை மெருகேற்றியுள்ளது” என்றார்.

இதையடுத்து இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில்... “பாண்டிராஜ் சார் போன்ற திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து, இது போன்ற பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வாட்ச்மேன்' திரைப்படத்திற்கு கிடைத்த புகழாரம், திரைப்படத்திற்கு மற்றுமொரு வலிமை. இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் குடும்ப பார்வையாளர்களை தனது தொடர்ச்சியான படங்களின் மூலம் ஈர்த்தவர். அத்தகைய இயக்குநரிடமிருந்து பாராட்டுகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது ‘வாட்ச்மேன்' குழுவினராகிய ஜி.வி.பிரகாஷ், யோகிபாபு, மேலும் அனைத்து தொழில்நுட்பத் துறையினரும் சிறப்பான பணி செய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்" என்றார். “வாட்ச்மேன்” திரைப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷ்ன், அருண் மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 12,2019 அன்று உலகளவில் வெளியிட திரைப்பட குழுவினரால் திட்டமிடபட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT