டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் 'வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் பேசியபோது.... "நாச்சியார் படத்தில் என் கதாபாத்திரத்தை வடிவமைத்து கொடுத்தவர் விஜய் சார் தான். அவருக்கு 9 படங்களில் இசையமைத்திருக்கிறேன். இப்போது அவர் இயக்கத்தில் நடிகனாக நடித்திருக்கிறேன். ஒரு ஸ்டைலிஷ் படமாக உருவாக்க ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவும் கடுமையாக உழைத்திருக்கிறது. கோடை விடுமுறையில் குழந்தைகளை கவரும் ஒரு படமாக இருக்கும்" என்றார்.