ADVERTISEMENT

"காதல் என்பது அரசியல்" - அடுத்த சம்பவத்திற்கு ரெடியான பா.ரஞ்சித்

06:28 PM Jul 06, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெய்ராம் நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணியை எட்டியுள்ளது.

இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார். அத்துடன் "காதல் என்பது அரசியல்" என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக பா. ரஞ்சித் தனது படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கருத்துக்கள் ஆழமாக முன்வைக்கப்படும். அந்த வகையில் இந்த படத்திலும் அப்படி ஒரு அரசியலைத்தான் காதலுடன் சேர்த்து சொல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT