/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1454.jpg)
பா.ரஞ்சித், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா என்பவர் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகி வரும் இப்படம் இறுதிக்கட்ட பணியில்உள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பைவெளியிட்டுள்ளது. அதன்படி நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் 31 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)