/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nn_0.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. இரஞ்சித், கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து 'சார்ட்டாபரம்பரை' படத்தைஇயக்கியிருந்தார். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், பெரும் வெற்றிபெற்று விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம்,துஷாரா விஜயன் நடிக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தைஇயக்கிவருகிறார். முழுக்க முழுக்க காதல் பிண்ணனி வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுவருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இப்படத்தில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் மனைவி அனிதா ரஞ்சித் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அனிதா ரஞ்சித், 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த அவரது கணவரும், இயக்குநருமான பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)