ADVERTISEMENT

ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

03:42 PM Jul 21, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனமான 'ரவுடி பிக்சர்ஸ்' சார்பில், தயாரித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' பட இயக்குநர் மிலந்த் ராவ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் அஜ்மலும் நடித்துள்ளனர்.

கிரிஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது ரிலீசுக்குத் தயாராகியுள்ள நிலையில், 'நெற்றிக்கண்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக விக்னேஷ் சிவன் சமூகவலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், ஓடிடி ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'நெற்றிக்கண்’ படம் பிரபல கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் ரீமேக் என சமீபகாலமாக செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT