/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/189-s_0.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க கமிட்டான நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது. பின்பு ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் விக்னேஷ் சிவன் உறுதி செய்தார். இப்படம் கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷன்தயாரிப்பதாகக் கூறப்பட்ட நிலையில்,லலித்தின் செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அவர் பிரதீப் ரங்கநாதனின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா இதற்கு முன்னதாக ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவிற்கு அக்காவாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் பெறும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தியில் ரீமேக்காகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)