Photoshoot at Tirupati temple with shoes ... Controversial Vicky, Nayan!

Advertisment

கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. கோலாகல ஏற்பாடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய விருந்து எனத்தடபுடலாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது.நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி காதலி நயன்தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரம் பிடித்தார். இத்திருமண விழாவில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில் இன்று இருவரும் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு கோவில் வளாகத்திலேயே போட்டோ ஷூட் ஏற்பாடு செய்யப்பட்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். மாட வீதிகளில் காலணி அணிந்தபடியே வெட்டிங் ஷூட் எனப்படும் போட்டோஷூட் நடத்தினர். மாட வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் காலணியுடன் நடமாட அனுமதி இல்லாத நிலையில் திரைப்பட படப்பிடிப்பு போன்று காலணியுடன் போட்டோ சூட் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.