ADVERTISEMENT

சென்னைக்கு டாட்டா பை! ஹைதராபாத்துக்கு ஹாய் சொன்ன நயன்தாரா! 

04:42 PM Apr 27, 2021 | santhosh

ADVERTISEMENT

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குனர் சிவா இயக்கிவரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு அவர் உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. அதில் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி கலந்துகொண்டு நடித்து வருகிறார். கடந்த இரண்டு வாரமாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை நயன்தாரா தற்போது ஹைதராபாத் சென்றுள்ளார். தனி விமானத்தில் நயன்தாரா ஹைதராபாத்தில் தரையிறங்கிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT