/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/355_6.jpg)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்திருக்கலாம் என தகவல் வெளியானது. ஆனால் விதிமுறைகளை மீறி இருவரும் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்ரமணியன் இருவரிடமும் விளக்கம் கேட்கப்படும் எனவும் பின்பு இந்த விவகாரம் குறித்து Director of medical services விசாரணை நடத்த வேண்டுமா என முடிவு எடுப்பார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், "விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதில் விதி மீறல்கள் இருக்கிறதா மற்றும் முரண்பாடுகள் உள்ளதா என்பதை கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்" என பேசியுள்ளார். இந்த விசாரணை, 3 பேர் கொண்ட குழு, ஒரு சுகாதார இணை இயக்குநர் தலைமையில் ஒரு வாரத்தில் சுகாதாரத்துறைக்கு அறிக்கையை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)