/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/358_5.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படத்தை சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்துள்ளநிலையில் படக்குழு வெளியீட்டுப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே வெளியான பாடல்கள்மற்றும் டீசர் ரசிகர்களிடையேநல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படக்குழு தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், வழக்கமான தமிழ் படங்களில் கோவிலில் ஏற்றி வைத்த தீபம் காற்றில் அணையும் போது ஒரு ஆண் ஒரு பெண் வந்து தடுப்பார்கள் அதன் பின் இருவருக்கும் காதல் ஏற்படுவதுதான் வழக்கம். ஆனால் இந்த ட்ரைலரில் காற்றில் அணையும்தீபத்தை ஒரு ஆண், இரண்டு பெண்கள் வந்து தடுத்து இரண்டு பெண்கள் மீதும் கதாநாயகனுக்கு காதல் ஏற்படுவது போன்றுஅமைத்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் அட இது புதுசா இருக்கே என்ற தொனியில் கமெண்ட்செய்தும், ட்ரைலரைட்ரென்ட்செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)