ADVERTISEMENT

”எங்களைப்போல நீங்களும் வளர வேண்டும்” - விஜய் சேதுபதியின் சகோதரிக்கு பிரபல தொழிலதிபர் வாழ்த்து

04:23 PM Aug 27, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்களுக்கும் அவர்களின் அனைத்து வகையான சுபவைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்யும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


விழாவில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி பேசுகையில், ''இறைவி விற்பனையகத்திற்கு இப்போதுதான் முதன்முறையாக வருகை தந்திருக்கிறேன். 1950களில் இந்த பகுதியில் ஒரே ஒரு சாலை மட்டுமே இருந்தது. அந்த சாலையில் எப்போதாவது ஒரு கார் கடக்கும். வேளச்சேரியிலிருந்து கிழக்கு தாம்பரம் சாலை வரும் வரை சற்று பயமாகத்தான் இருக்கும். ஆனால் தற்போது சாலை வசதிகளும் மேம்பட்டு இருக்கிறது. மக்களும் ஏராளமானவர்கள் இங்கு வசிக்கிறார்கள். சாலை விரிவாக்கம் நடைபெற்று, ஏராளமான விற்பனையகங்களும் இருக்கின்றன. இதுபோன்ற இடத்தில் இவ்வளவு பிரம்மாண்டமாக இறைவி கடை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

இறைவியின் சிறப்பம்சம் என்னவென்றால், ஆடை வடிவமைப்பாளர்கள் இங்கேயே இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை துல்லியமாக உணர்ந்து உடனடியாக அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுகிறார்கள். புதிய புதிய டிசைன்களை நாங்கள் அறிமுகப்படுத்துவதை விட, நீங்கள் அறிமுகப்படுத்தும்போது அது கூடுதல் கவனத்தை பெறும். அதனால் இந்த நிறுவனம் மேலும் அமோகமாக வளர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

நல்லி சில்க்ஸ் தொடங்கி 94 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட நல்லி சில்க்ஸ் கடை வாடிக்கையாளர்களின் பேராதரவால் இன்று உலகம் முழுவதும் 40 கிளைகளுடன் சேவையாற்றி வருகிறது. எங்களைப் போன்றே நீங்களும் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT