ADVERTISEMENT

"என்னோட அண்ணன், என்னோட தளபதி..." - ஷாருக்கான் பதிவிற்கு அட்லீயின் பதில்

01:04 PM Apr 06, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் ஏப்ரல் 13-ஆம் தேதியன்று திரைக்கு வரவிருக்கும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தினுடைய இந்தி ட்ரைலரை வருண் தவான் வெளியிட்டார். ஷாருக்கான் இப்படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னை போல தீவிர விஜய் ரசிகரான இயக்குநர் அட்லீயுடன் சேர்ந்து 'பீஸ்ட்' படத்தின் ட்ரைலர் பார்த்தேன். ட்ரைலர் சிறப்பாக இருந்தது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்" என பகிர்ந்திருந்தார். இந்த டீவீட்டை ரீட்வீட் செய்த இயக்குநர் அட்லீ, "என்னோட அண்ணன், என்னோட தளபதி, விஜய் அண்ணாவின் 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13-ல் வெளியாகிறது. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி சார்" என குறிப்பிட்டுள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் பெயரிடாத படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT