actor vijay cameo role Shahrukh Khan Jawaan movie

Advertisment

'ராஜாராணி' படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானவர் அட்லீ. இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அட்லீ. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜவான் படம் குறித்தபுதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜவான் படத்தில் நடிகர் விஜய் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவரைபோன்றேபாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகிய இருவரும் கௌரவ வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜவான் படம் இந்தியில் எடுக்கப்பட்டு, தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.