தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கரின் பட்டறையிலிருந்து கடந்த 2013ஆம் ஆண்டு ராஜா ராணி எனும் படத்தை இயக்கியவர் அட்லி. முதல் படம் போலவே தெரியாத அளவிற்கு அத்தனை சிறப்பாக அந்த படத்தை இயக்கியிருந்தார். படமும் செம ஹிட் அடித்ததை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி என்றொரு படத்தை இயக்கினார். இந்த படமும் விஜய் நடித்த படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து ஒரு சாதனையை செய்தது. தன்னுடைய குருநாதார் ஷங்கரை வசூல் வேட்டையில் மிஞ்சிவிடுவார் அட்லி என்கிற அளவிற்கு தன்னுடைய இரண்டாவது படத்திலேயே பேசப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போதுவரை இயக்கியுள்ள இரண்டு படங்களுமே நடிகர் விஜய்யை வைத்துதான்.

atlee sharuk khan

Advertisment

Advertisment

இப்படி ஒவ்வொரு படத்திலும் விஜய் என்னும் பெரிய நடிகருக்கு தேவையான மாஸ், அவருடைய பார்க்க வரும் குடும்ப ரசிகர்களுக்கு தேவையான கருத்து, செண்டிமெண்ட் என்பதில் மட்டும் கவனம் செலுத்தி கதைகளிலும், திரைக்கதையிலும் பெரிதாக சிரமம் இல்லாமல் வசூலில் சாதனை படைத்து வரும் இவருடைய படங்கள், அடுத்து அட்லி யாருடன் கூட்டணி சேரப்போகிறார் என்று முன்பே கிசுகிசுக்கப்பட்டாலும் தற்போது அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவரவில்லை.

பல வருடங்களாக ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் அதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வேஸ்ட்டாகி வருகிறது. இந்நிலையில் தனக்கு ஒரு நல்ல வெற்றியை அட்லி கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் ஷருக்கும் அட்லியும் ஒன்றாக இணைந்து படம் பணிபுரிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என தகவல் வெளியாகியிருப்பதாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி இந்தியளவில் ட்ரெண்டாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆமாம், வருகிற நவம்பர் 2ஆம் தேதி ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.