ADVERTISEMENT

செல்வராகவனுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்!

01:16 PM Nov 05, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவன், 'சாணிக்காயிதம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கிவருகிறார். இதில் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 'சாணிக்காயிதம்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில் 'சாணிக்காயிதம்' படத்தின் முக்கிய தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இசையமைப்பாளர் சாம் சி.எஸ். 'சாணிக்காயிதம்' படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ், "இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இத்தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் செய்துவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT