bakasuran dubbing completed mohan g tweet about selvaraghavan

Advertisment

பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக மோகன்.ஜி தெரிவித்துள்ளார். மேலும், "இந்த மாமனிதருடன் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள். மீண்டும் செல்வா சாருடன் இணைந்து பணிபுரிய ஆசை. இனிமையான, எளிமையான மாமனிதர் இவர். நன்றி செல்வராகவன் சார்." என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக செல்வராகவன், "மகிழ்ச்சியான தருணங்கள். காலம் போனதே தெரியவில்லை. பேரன்புக்கு நன்றி" என கூறியுள்ளார். இதனிடையே இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்த நிலையில் விரைவில் ரிலீஸ் தேதியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.