ADVERTISEMENT

பிரபாஸின் அடுத்த படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர்! 

06:53 PM Oct 20, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

‘சாஹோ' படத்தை தொடர்ந்து பிரபாஸ், ராதா கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரபாஸின் 20ஆவது படமான இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

ADVERTISEMENT

இதில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 'பிரபாஸ் 20' படக்குழு ஷூட்டிங்கை தொடங்கியுள்ளது.

இனி வெளிநாட்டு படப்பிடிப்பு அனுமதிக்கு நாட்களாகும் என்பதால், இங்கே அரங்குகளை உருவாக்கி ஷூட்டிங்கை தொடங்கியுள்ளது படக்குழு. பிரம்மாண்டமான மருத்துவனை, ஐரோப்பாவின் வீதிகள், பெரிய கப்பல் உள்ளிட்ட அரங்குகள் அமைத்தது படக்குழு.

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தமாகியுள்ளார். டியர் காம்ரேட் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஜஸ்டினின் பாடல்களுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT