Radheshyam Teaser

Advertisment

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

கைரேகை நிபுணர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளஇப்படம் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசரைப் படக்குழு இன்று (23.10.2021) வெளியிட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு டீசரை வெளியிட்டுள்ள படக்குழு, நடிகர் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளது.