ADVERTISEMENT

"நமது கனவுகள் அழிந்து போகவில்லை..."- மாஸ்டர் தயாரிப்பாளர் ட்வீட் 

06:01 PM Apr 09, 2020 | santhoshkumar

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. பிகில் படத்தை தொடர்ந்து உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, டெல்லி, சிவமோகா, நெய்வேலி என பல இடங்களில் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT


இப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில்தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரியளவில் ரசிகர்களை அழைத்து இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்று விஜய் மேடையில் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT



இதன்பின் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ள நிலையில், மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மாஸ்டர் படம் முதலில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது, ஆனால் தற்போதை சூழ்நிலையால் படம் எப்போது ரிலீஸாகும் என்று தெரியவில்லை.

கரோனாவால் இன்று படம் வெளியாகவில்லை என்பதால் சோகத்தில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் படக்குழு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

இதனிடையே மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ட்விட்டரில், "நாங்களும் ஏமாற்றம்தான் அடைந்திருக்கிறோம். நமது கனவுகள் அழிந்து போகவில்லை, தள்ளிதான் போய் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT