Skip to main content

அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இல்லைன்னா உங்களுக்கு தான் சிக்கல்... விஜய்க்கு நெருக்கடி கொடுக்க பாஜக வைக்கும் செக்!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

ரெய்டுகள் மூலம் தன்னை மிரட்டும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் காரசாரமாக விஜய் பதிலடி கொடுப்பார் என்று அவர் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் அவர் அந்த விழாவில் ரொம்பவும் சோகமாவும் இறுக்கமாவும் காணப்பட்டார். கடைசியாக பேசும்போது மக்களுக்காகத்தான் சட்டங்களே தவிர சட்டங்களுக்காக மக்கள் இல்லை என்று கூறினார். இது சம்பந்தமாக  அவர் தரப்பில் கேட்ட போது, ரெய்டுகளின் மூலம் விஜய்யை நேரடியாக டெல்லித் தரப்பால் சிக்கவைக்க முடியவில்லை. 
 

vijay



அதனால் அவருடைய "மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித் ஜெயினைக் குறிவைத்து, ரெய்டுகளை நடத்தி செக் வைத்துள்ளதாக சொல்கின்றனர். விஜய்யை அமைதியாக இருக்கச் சொல்லுங்க. இல்லைன்னா உங்களுக்குத்தான் சிக்கல்னு ஜெயினை அவர்கள் மிரட்டிய மிரட்டல் தான், விஜய்யை அமைதி காக்க வைத்துள்ளது என்றவர்கள், அதனால் தான் அவர் சைலண்ட்டா இருந்துவிட்டு, விஜய்சேதுபதியை பேசவிட்டார் என்கின்றனர். கடவுளை காப்பாத்துறேன்னு சொல்றவங்களை நம்பாதீங்கன்னு பா.ஜ.க. தரப்பை விஜய்சேதுபதி கலாய்ச்சதில் விஜய் ரசிகர்களுக்கு ரொம்பவே சந்தோஷம் அடைந்துள்ளனர். விஜய்யின் அமைதியும் ரொம்ப நாளுக்கு நீடிக்காது என்றும் அழுத்திச் சொல்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.