ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் மீசையை முறுக்கு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இந்த படம் கொடுத்த வெற்றியால் மீசை முறுக்கு படத்தை தயாரித்த சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் இரண்டாவதாக நட்பே துணை என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தார்.

Advertisment

thalapathy 64

இப்படமும் வெற்றி அடைய மூன்றாவது முறையாக சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம்தான் ‘நான் சிரித்தால்’. இந்த படத்தை இராணா இயக்குகிறார். இதில் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் கெக்கப் பெக்க என்னும் குறும்படத்தை தழுவி எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையும் இராணாதான் இயக்கியிருந்தார்.

எட்டு தொட்டாக்கள், ரங்கூன், சர்கார், நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லல்லு. இவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார். இவர் ஹிப்ஹாப் ஆதியுடன் நடித்துள்ள நான் சிரித்தால் படத்தின் ட்ரைலரை விஜய்க்கு மாஸ்டர் ஷூட்டிங்கில் காண்பித்துள்ளார்.

Advertisment

அப்போது அதை பார்த்த நடிகர் விஜய், “நான் சமீபத்தில் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்த ட்ரெய்லர் 'நான் சிரித்தால்'. ரொம்பப் பிடிச்சது. என்னோட வாழ்த்தை படக்குழுவிடனரிடம் சொல்லுங்க” என்று லல்லுவிடம் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் மெர்சல் படத்தில் விஜய் அழுகும் காட்சியை பார்த்து ஹிப்ஹாப் ஆதி சிரிப்பதுபோல ஒரு காட்சி இடம்பெறும். ஆதிக்கு இதில் நெர்வஸ் லாஃபர் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.