ADVERTISEMENT

'மரைக்காயர்' படத்தின் ட்ரைலரை வெளியிட்ட படக்குழு  

04:50 PM Nov 30, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' என்ற சரித்திர படத்தில் நடித்துள்ளார். இப்படம் 100 கோடி பட்ஜெட் செலவில் உருவாகியுள்ளது. இதில், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இப்படம் திரையரங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' படம் டிசம்பர் 2 ஆம் தேதி முழக்கம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படக்குழு 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் இரண்டாவது ட்ரைலரை வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியில் வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சிறந்த திரைப்படம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் இப்படம் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT