/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mohanlal_3.jpg)
இயக்குநர் ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு திட்டமிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'த்ரிஷ்யம் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய ஜீத்து ஜோசப், மிகக் குறுகிய காலத்திலேயே படத்தின் பணிகளை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, 'த்ரிஷ்யம் 2' படம் நேற்று (19.02.2021) ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் மோகன்லால் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், "'த்ரிஷ்யம் 2' படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படம் பார்த்த அனைவரும் மெசேஜ் மற்றும் கால்களின் மூலமாக பாராட்டுவது நெகிழ்ச்சியடைய வைக்கிறது. நல்ல படத்தை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் எப்போதும் பாராட்டி ஆதரிப்பார்கள் என்பதற்கு 'த்ரிஷ்யம் 2' படத்தின் வெற்றி மிகப்பெரிய சான்று. சினிமாவை விரும்பும் மக்கள் தொடர்ந்து தரும் அன்பும் ஆதரவுமே நாங்கள் எங்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்கமளிக்கிறது. உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றிகள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)