mohanlal to do cameo in rajini jailer reports

Advertisment

ரஜினிகாந்த்சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், மலையாள நடிகர் மோகன்லால் இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கதாநாயகியாக தமன்னா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகளைஇன்னும் சில தினங்களில் எடுக்கவுள்ளதாகத்திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.